தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கியது. இதையடுத்து தொடர்ந்து அதிகரித்த தொற்று 3 அலைகளாக பரவியது. முதல் அலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகபட்சமாக 6000 த்திற்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 127 பேர் பலியாகினர். இதையடுத்து 2வது அலையில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் கொரோனா பாதிப்பு கோரத்தாண்டவம் ஆடியது. தொடர்ந்து எழுந்த 3-வது அலையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ள அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைந்தனர். இருப்பினும் நடப்பு வருடம் கட்டாயம் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி தேர்வுகள் நடைபெற உள்ளன. இதை தொடர்ந்து பள்ளிகளில் 22-23 ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் மாணவர்களை பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இலவசக் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில்(1 முதல் 8ம் வகுப்புகளுக்கு) 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்நிலையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்கியது. அதிகபட்சமாக தங்கள் இருப்பிடத்திற்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். ஒரு வாரத்தில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க வரும் மே18-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனினும், பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh