தமிழ்நாடு

அரசு சார்பில் விலையில்லா கேஸ் இணைப்பு, ரேஷனில் இலவச அரிசி – முதல்வர் அறிவிப்பு!!

இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பங்களுக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்த தமிழ் அகதிகளுக்கு அரசின் எந்த நலத்திட்டங்களும் வழங்கப்படவில்லை. பொதுவாக அரசு நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்படுகின்றன. ஆனால் தமிழ் அகதிகளுக்கு ரேஷன் அட்டைகள் வழங்காததால் அவர்களுக்கு எந்த நலத்திட்டங்களும் சென்றடைவதில்லை. மேலும் அவர்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதில்லை. அதனால் தமிழகத்தில் அவர்கள் சொந்தமாக சொத்துக்களும் வாங்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் கூறுகையில், இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிவித்தார். மேலும் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களை அகதிகளாக இல்லாமல் குடிபெயர்ந்த தமிழர்கள் என அறிவித்து குடியுரிமை வழங்கவது குறித்தும், சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி மாதந்தோறும் இலங்கை அகதிகள் முகாம்களில் இருக்கும் அகதிகளின் குடும்பங்களுக்கு பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. அவை ஏற்கனவே வழங்குவதை விட தற்போது உயர்த்தி வழங்கப்படும். மேலும் இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். ரேஷன் கடையில் இலங்கை தமிழர்களுக்கு விலையில்லா அரிசி அளிக்கப்படும். அத்துடன் இலங்கை தமிழரின் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் 50 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  ஆவின் நிறுவனத்தில் 10 பேருக்கு பணி நியமனம் – முதல்வர் முக ஸ்டாலின் வழங்கல்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: