இந்தியா

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் டிச.25ம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் ஆன்லைன் மூலமாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் டிச.25ம் தேதி முதல் தொடங்குகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தகைய சிறப்பு மிக்க திருக்கோயில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை முறையே பின்பற்றுமாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வழங்க முடிவு செய்தது. அதன்பின் தற்போது முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு தினசரி திருப்பதி ஏழுமலையான் தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதத்திற்கான கட்டண தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகிய இரண்டையும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வகையில் வரும் நாட்களில் வெளியிட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதாவது ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் 1 மாதத்திற்கு 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகளை நாளை டிச.24ம் தேதி காலை 9 மணியளவில் வெளியிடவுள்ளது. அதேபோல் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஒரு நாளைக்கு நேரில் வருபவர்களுக்கு 5 ஆயிரம் மற்றும் ஆன்லைனில் 5 ஆயிரம் தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி ஆன்லைனில் 1 மாதத்திற்கு 1 லட்சத்து 55 ஆயிரம் டிக்கெட்டுகள் நாளை மறுநாள் டிச.25ம் தேதி காலை 9 மணியளவில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பக்தர்களுக்கு தங்களது தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: