தமிழ்நாடு

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி – விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

தமிழக அரசின் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பள்ளிகளில் சேர்க்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏழை, எளிய குழந்தைகளின் கல்வி நலன் கருதி தமிழக அரசு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது 2021-22 ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் நிர்வாக பணிகள், மாணவர்கள் சேர்க்கை போன்ற அனைத்து பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடப்பாண்டுக்கான குழந்தைகளின் இட ஒதுக்கீடு குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் தம்புராஜ் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிகழ் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையற்ற மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளின் நுழைவு நிலை வகுப்பில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதன்படி நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் வரும் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கு குழந்தையின் வயது சான்று, புகைப்படம் மற்றும் இருப்பிட சான்று ஆகியவை தேவைப்படும் என்றும் எங்கிருந்து வேண்டுமானாலும் இணைய வழியில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் பதிவேற்றம் செய்ததும் அதற்கான ஒப்புகை சீட்டை பெற்று கொள்ளலாம். மேலும் இதற்கு விண்ணப்பிக்க முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட வட்டார வளமைய அலுவலகங்களிலும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: