தமிழ்நாடுமாவட்டம்

ஓபிஎஸ் தம்பி ராஜா மீது மோசடி, கடத்தல் புகார்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மரப் பொருட்கள் விற்கும் நிறுவனம் நடத்தி வருபவர் பழனி, இவரிடமிருந்து ஓ.ராஜா மற்றும் அவரது மகன் அமர்நாத் ஆகியோர் மரச்சாமான்களை கொள்முதல் செய்துள்ளனர். அதற்கான நிலுவை தொகை ஒரு கோடியை ராஜா வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

நிலுவைத்தொகையை கேட்டபோது ராஜாவும், அமர்நாத்தும் தன்னை திருச்சிக்கு கடத்தி சென்றதாகவும், வெற்று பத்திரத்தில் எழுதி என்னை மிரட்டி அவர்கள் கையெழுத்து வாங்கியதாகவும் காரைக்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபர் பழனி என்பவர் காரைக்குடி டிஎஸ்பி அருணிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!