உலகம்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4400 கோடி அபராதம் விதித்த பிரான்ஸ் – ஏன் தெரியுமா?

பிரான்ஸ் நாட்டு அரசு கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4400 கோடி அபராதம் விதித்துள்ளது. கூகுள் தனது தளத்தில் மற்ற ஊடங்கங்களின் செய்திகளை பகிரும்போது செய்தி நிறுவனங்களுக்கு உரிய பங்கு தொகை அளிப்பதில்லை என புகார் தெரிவித்துள்ளன பிரான்ஸ் ஊடங்கங்கள்.

2020 ஆம் ஆண்டு Agency France Press என்ற செய்தி நிறுவனம் கூகுள் நிறுவன தேடுபொறியில் வெளியாகும் செய்திகளுக்கு உரிய பங்கு தொகை அளிக்கவில்லை என புகார் அளித்து இருந்தது. தற்போது பிரான்ஸ் நாடு, கூகுள் செய்திகளை தங்கள் தளத்தில் வெளியிடும்போது அதற்குரிய சன்மானத்தை வழங்கத் தவறியதை உணர்த்துவதற்காக ரூ.4400 கோடி அபராதம் விதித்துள்ளது.

பிரான்ஸ் நாடு விதித்துள்ள இந்த அபராதத் தொகையை எப்படிச் செலுத்தப் போகிறது என்பது குறித்து கூகுள் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். மீறினால் நாள் ஒன்றுக்கு 9 லட்சம் யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு கூகுளை எச்சரித்துள்ளது.

இதை தொடர்ந்து கூகுள் பிரான்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரான்ஸ் அரசின் இந்த முடிவு வருத்தம் அளிப்பதாகவும்,செய்தி நிறுவனங்களுடன் முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழலில் இப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: