இந்தியா

சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா காலமானார்!

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்கா உடல்நலக்குறைவு காரணமாக, இன்று டெல்லியில் காலமானார்.

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா (வயது 64) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ​​இன்று அதிகாலை 4.30 மணியளவில் டெல்லியில் காலமானார். இவர் 1974 ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். மேலும் ரஞ்சித் சின்ஹா பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

சிபிஐ இயக்குநராக மட்டுமின்றி பல முக்கியமான பதவிகளை வகித்திருந்தார். அவர் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐடிபிபி) இயக்குநராக இருந்துள்ளார் என்பதுடன், ரயில்வே பாதுகாப்பு படையின் தலைவராகவும் இருந்தார். மேலும், பாட்னா மற்றும் டெல்லி சிபிஐ ஆகியவற்றில் உயர் பதவிகளில் பணியாற்றி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பணியில் இருந்த காலத்தில், கால்நடைத் தீவன ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளின் மூலம், இவர் பிரபலமானவர். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:  18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: