ஆரோக்கியம்

ஜலதோஷம் நீங்க இதை பின்பற்றுங்க..!

ஃப்ளு அல்லது இருமல் இருந்தால் ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களை சாப்பிடக்கூடாது என்பது உண்மையல்ல ஜலதோஷம் உள்பட இதர தொற்றுக்களை எதிர்க்க உதவும் வைட்டமின் சி இவற்றில் அதிகமாக உள்ளது.

மரவள்ளி, சர்க்கரைவள்ளி, உருளை சேம்பு ஆகிய கிழங்கு வகைகளில் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளது. இவற்றில் மாவுச் சத்தும் அதிகமாக உள்ளது.

கடலை எண்ணைய்யை விட அதே கொழுப்பு அமில அமைப்புடைய தவிடு எண்ணைய் சிறந்ததாகும். ரத்தத்தில கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும் பண்பு தவிடு எண்ணைக்கு உள்ளது.

நெற்றியின் இரு புறங்களிலும் கண் இமைக்கு அருகில் இரு விரல்களை அவ்வப்போது அழுத்திக்கொண்டே இருந்தால் தலைவலி குறையும். அப்பகுதிகளில் தலைவலியை குணப்படுத்தும் அக்குப் புள்ளிகள் உள்ளன.

திடீர் தலைச் சுற்றல் வரும்போது நிற்கவோ உட்காரவோ கூடாது. மூளைக்கு ரத்தம் குறைவாகச் செல்வதால் தலைச் சுற்றல் ஏற்படலாம். காற்றோட்டமான இடத்தில் தலையணை இல்லாமல் படுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

பழங்களில் பப்பாளியில் சர்க்கரை தவிர ‘ஏ’ வைட்டமின் சத்தும் உண்டு. அதிக அளவில் சோடா,கலர் பானங்களையும் இனிப்பு பொருள்களையும் சாப்பிடும் குழந்தைகளுக்கு பற்குழிவும் பல் சொத்தையும் இளம் வயதிலேயே ஏற்பட ஆரம்பிக்கின்றன.

காரட்டில் வைட்டமின் ‘ஏ’ அதிகமாக இருப்பதாக நினைப்பது தவறு.100 கிராம் காரட்டில் இருப்பது 1890 மைக்ரோகிராம் கரோட்டிந்தான் ( வைட்டமின் ஏ முன்னோடி) ஆனால் 100 கிராம் முருங்கைக் கீரையில் இதைப்போல் 4 மடங்கு வைட்டமின் ‘ஏ’ உள்ளது. அகத்திக் கீரையில் மூன்று மடங்கும், கறிவேப்பிலையில் 5 மடங்கு உள்ளது.

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும் அதனுடன் சிறிதளவு வேப்பங் கொழுந்தை சேர்த்து அரைத்து பிறகு அதை நிழலில் காயவைத்து மாத்திரையாக ஆக்கி தினமும் காலை, மாலை சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.

எலுமிச்சம் பழ சாறுடன் தேனை சமஅளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும். துளசி சாறும், இஞ்சிச்சாறும் சம அளவில் எடுத்து கலக்கி குடித்தால் சளி தொல்லை குறையும் பசும்பாலில் சிறிது அளவு ஒமம்போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளிநீங்கும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: