ஆரோக்கியம்

உடல் எடையில் கவனம் வேண்டும்!

உடல் பருமன் என்பது அதிக உடல் எடையை குறிக்கும். இதை உடல் பருமனை குறிக்கக்கூடிய பிஎம்ஐ என்ற குறியீடு அளவீடு கொண்டு கணிக்கலாம். பொதுவாக ஆண்கள் 21 முதல் 25 பிஎம்ஐ, பெண்கள் 18 முதல் 23 பிஎம்ஐ அளவை கொண்டிருக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும்போது, அதிக உடல் எடையாக கருதப்படும். பிஎம்ஐ அளவு 30-க்கும் மேலாக சென்றால் உடல் பருமனாக கருதப்படுகிறது. இவ்வாறு உடல் பருமன் அதிகரிப்பதால், சர்க்கரை நோய், அதிக இரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம், மூட்டு நோய் மற்றும் மூச்சு வாங்குதல் போன்ற பாதிப்புகள் வருவதற்கு காரணமாக அமைகிறது.

இந்நிலையில், உணவு சாப்பிடும் முறை மற்றும் போதிய உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தால் அதிக உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம். அதையடுத்து, உடல் பருமனாக ஆவதற்கு என்ன காரணங்கள்? உடல் பருமனை எப்படி குறைப்பது? என பார்க்கலாம்.

காரணங்கள்

போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடல் உழைப்பு இல்லாதது.

அதிக கலோரி கொண்ட உணவை சாப்பிடுவது.

துரித உணவு, ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்வது.

தைராய்டு சுரப்பி குறைவது, ஹார்மோன் பிரச்சனை ஏற்படுவது.

சில மருந்துகள் காரணமாகவும் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

ஒரு சிலருக்கு பரம்பரை நோய் குறைபாட்டினாலும் உடல் பருமன் ஏற்படக்கூடும். .

எப்படி குறைப்பது

உடல் பருமனை குறைக்க உடல் பயிற்சி அவசியம்.

தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடை பயிற்சி செய்வது நல்லது.

நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் முதலிய பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

உடல் பருமனை குறைப்பதற்குரிய யோகாசன பயிற்சிகளான சூரிய நமஸ்காரம், தணுராசனம், திரிகோணாசனம், ஹலாசனம், வீராசனம், பட்சி மோத்தாசனம், தடாசனம், முக்தாசனம் போன்றவற்றை செய்து வருவதால் உடல் பருமனை குறைக்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

அதிக கலோரி சத்து கொண்ட அரிசி சார்ந்த உணவுகளை நீக்க வேண்டும்.

சர்க்கரை சத்து அதிகம் உள்ள கிழங்கு வகைகள், பட்டாணி வகைகளை தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை தவிர்க்கலாம்.

புளிப்பான பழங்கள் வயிற்றில் அமிலத்தை சுரந்து பசியை அதிகப்படுத்தும் என்பதால் அதை தவிர்க்கலாம்.

எண்ணெயில் வறுத்த உணவு பண்டங்களை தவிர்ப்பது நல்லது.

அதிக கலோரி சத்து கொண்ட குளிர்பானங்களை முற்றிலும் நீக்குவது நல்லது.

எடுத்துக்கொள்ள வேண்டியது

குடிநீருக்கு வெந்நீர் மட்டுமே பயன்படுத்தும்போது, அது உடலில் கொழுப்பு கரைவதை துரிதப்படுத்தும்.

அதிக நார்சத்து கொண்ட, குறைந்த கலோரி சத்து உடைய கேழ்வரகு, கோதுமை, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:  நுரையீரல் சம்பந்தமான நோய்களில் இருந்து நம்மை காக்கும் செடி?

பப்பாளி, கொய்யா, அன்னாசி போன்ற பழங்களை நொறுக்கு தீனிக்கு பதில் அதிகம் சாப்பிடலாம்.

நீர்சத்து அதிகம் உள்ள வெள்ளரி, சுரைக்காய், முள்ளங்கி போன்ற குறைந்த கலோரி சத்து உள்ள காய்கறிகளையும், நார்சத்து மிக்க கீரைகளையும் உண்ணும் உணவில் அதிகம் சேர்க்கவும்.

பால் மற்றும் பால் பொருட்கள் உடல் பருமனை அதிகரிக்கும் என்பதால் மோர் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

கிரீன் டீ எடுத்துக்கொள்வதும் நல்லது.

சர்க்கரை சத்து இல்லாத உணவை எடுப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம்.

தண்ணீருடன் சீரகம் அல்லது கொத்தமல்லியை சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரையே குடித்து வருவது உடல் எடையை குறைக்க உதவும்.

வெந்தயத்தை லேசாக வறுத்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: