உலகம்

ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்கு விமான சேவை – செப்டம்பர் 13 முதல் தொடக்கம்!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அங்கு இருந்த மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஆப்கான் – பாகிஸ்தான் இடையே விமான சேவை செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க படை முழுவதுமாக பின்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் தலிபான்கள் வசம் நாடு வந்தது. இதனை அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது. அதையடுத்து அந்த நாட்டில் வான்வழி போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. அதனால் வெளிநாடு மற்றும் ஆப்கன் நாட்டை சேர்ந்தவர்கள் என மக்கள் பலரும் தரை மார்க்கமாக ஆப்கன் எல்லையில் குவிந்தனர். கத்தார் உதவியுடன் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் 6.52 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்பளவில் அமைந்துள்ள நாடு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உட்பட மொத்தம் ஆறு சர்வதேச நாடுகளின் எல்லையை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ளது. ஆக்கிரமிப்பு பகுதிகளாக கருதப்படும் காஷ்மீரின் சில பகுதிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் 106 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அமெரிக்கா ஆகஸ்ட் 30 வரையில் சுமார் 80,000 மக்களை ஆப்கன் – காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றியுள்ளது. அதில் 5,500 பேர் மட்டுமே அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கமுள்ளவர்கள் அனைவரும் ஆப்கன் நாட்டை சார்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபான் ஆட்சியில் நிம்மதியாக வாழ முடியாது என்ற காரணத்தால் ஆப்கன் மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ஆனால் விமான சேவை இல்லாத காரணத்தால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த விமான சேவைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்து விட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இந்தியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. கூடுதல் தளர்வுகள் அறிவித்த இங்கிலாந்து!
Back to top button
error: