தலைமுடியை அடர்த்தியாக்கச் செய்யும் ஆளிவிதை எண்ணெய்..!
ஆளிவிதை தலைமுடியினை அடர்த்தியாக்குவதிலும், தலைமுடியை பளபளவென ஆக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்போது நாம் ஆளிவிதை எண்ணெயினைக் கொண்டு ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ஆளிவிதை எண்ணெய்- 3 ஸ்பூன்
தயிர்- கால் கப்
எலுமிச்சை பழம்- 1
செய்முறை
1. எலுமிச்சை பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு, சாறினைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் தயிரினைப் போட்டு ஆளிவிதை எண்ணெயினை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
3. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் ஆளிவிதை எண்ணெய் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து, சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி அடர்த்தியாகும்.