இந்தியா

மும்பையில் ஒன்றோடு ஒன்று வாகனங்கள் மோதி விபத்து.. பரிதாபமாக 5 பேர் பலி..

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், வாகனங்கள் சில ஒன்றுடன் ஒன்று மோதிக்‍கொண்ட விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மும்பை Khopli-யில் உள்ள மும்பை – புனே விரைவுச் சாலையில், இந்த கோர விபத்து நடந்துள்ளது. இதில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்‍குள்ளாயின. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த 5-க்‍கும் மேற்பட்டோரை மீட்டு, மருத்துவமனைக்‍கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்‍குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Back to top button
error: Content is protected !!