உலகம்

ஆப்கானில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு – ஆண் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப உத்தரவு!!!

ஆப்கானிஸ்தானில் இன்று 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்குத் திரும்ப வருமாறு அந்நாட்டு கல்வித் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் ஆப்கானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கிருந்த மக்கள் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வேறு நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பறக்கும் விமானங்களின் இறக்கைகளில் மக்கள் தொங்கி கொண்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியது. ஆப்கானின் முழு பகுதியையும் கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசை உருவாக்கியுள்ளனர்.

அரசின் முக்கிய பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்றும், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஆப்கான் பெண்களின் நிலை மிகுந்த கவலைகிடமாக இருந்து வருகிறது. ஆட்சியை கைப்பற்றி மூன்று வாரங்களில் புதிய அரசாங்கத்திற்கான அதிகாரிகளை நியமிக்கும் பணிகளை தலிபான்கள் மேற்கொண்டனர். புதிய அரசு தலைமையேற்கும் விழாவிற்கு 6 நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது ஆப்கானில் சனிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு திரும்ப வருமாறு அந்நாட்டு கல்வித் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலிபான்கள் கல்வித் துறை அமைச்சகம் முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது . இந்த பதிவில் பெண்களின் கல்வி வயது குறித்த எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  21 கோடியை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை..!
Back to top button
error: