இந்தியா

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்ப பதிவு – ஆகஸ்ட் 31 கடைசி நாள்!

கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் மூலம் முதுகலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது MBA ,MCA படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டின் இறுதியில் தொடங்கி ஓயாத அலையாக இருக்கும் கொரோனா தொற்றானது நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதன் பின் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது.

ஆன்லைன் முறையில் பாடங்கள் மட்டுமின்றி தேர்வுகளும் நடத்தப்பட்டது. அது போன்று ஆன்லைன் முறையில் தேர்வுகளை எழுதி மாணவர்கள் தங்களது இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளனர். அதனை தொடர்ந்து தங்களது முதுநிலை பட்டப்படிப்பு தொடருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் MBA, MCA படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பின்னர் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் gct.ac.in மற்றும் tn.mbamca.com என்னும் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான பதிவு கட்டணத்தையும் ஆன்லைன் முறையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக செலுத்தும்படி தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: