ஆரோக்கியம்தமிழ்நாடு

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை? வாங்க தெரிஞ்சுகலாம்..!

நம்மில் பலர், வாரம் ஒரு முறை காய்கறிகள், கனிகள் வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கிறோம். பொதுவாக குளிர்சாதனப்பெட்டியில் காய்கறிகளோ, பழங்களோ வைப்பது நல்லது கிடையாது. மூன்று நாட்களுக்குப் பின் காய்கனிகள் வாட தொடங்கி விடும். அதனால் சுவையில் வேறுபாடு வரலாம். இவ்வளவு ஏன்,காய்கறிகளின் வேதியியல் கட்டமைப்பு கூட மாறுபட வாய்ப்புள்ளது. முடிந்தவரை காய்கனிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை தவிர்க்கவும். மேலும் கீழே குறிப்பிடவுள்ள பொருட்களை நிச்சயம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டாம்.

வெங்காயம் :

main qimg b95dd15c87f97b5bdaf1089855e05f9e

வெங்காயத்தைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால், சீக்கிரம் அழுகி விடும். பாதி அரிந்த வெங்காயத்தை வைக்க வேண்டுமெனில், மூடி போட்ட கிண்ணத்திலோ, பாத்திரத்திலோ வைக்க வேண்டும். ஏனெனில், வெங்காயம் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நுண்ணுயிரிகளை(bacteria) உள்வாங்கும் தன்மை கொண்டது.

பூண்டு:

main qimg 7291c6813a3e6ef37d749d48ae9b2e10

பூண்டினை நன்கு காற்றோட்டம் உள்ள இடத்தில் வைப்பதே சிறந்தது. பூண்டின் ஆயுட்காலம் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் குறைந்து விடுகிறது. குளிர்சாதனப்பெட்டியில் தோலுரித்த பூண்டினை காற்று புகாத பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தலாம்

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கைக் குளிர் சாதனப்பெட்டியில் வைப்பதால் அதன் இயற்கை தன்மை, கட்டமைப்பு மாறிவிடுகிறது. இது சக்கரைவள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற அனைத்து கிழங்கு வகைகளுக்கும் பொருந்தும்.

தக்காளி :

main qimg 5d16c122877ef641b1b3e021011e3ac2

தக்காளியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் அதன் உயிரணுக்கள் பாதிக்கப்படுகிறது. தக்காளியின் சுவையிலும் அது மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

உலர்ந்த பழங்கள் (dry fruits):

main qimg 0cb4134a89c134705fda82c2125684e0

உலர்ந்த பழங்களைக் குளிர் சாதனப்பெட்டி அல்லாது, காற்று புகாத பாத்திரத்தில் வைத்தாலே அதன் ஆயுட்காலம் கூடும். மேலும் அதன் தன்மையும் மாறாமல் இருக்கும்

பழங்கள்:

முன்பு கூறியது போல், பழங்களை அறை வெப்பநிலையிலே வைப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அதனால் அதன் தன்மையை இழக்காமல் பாதுகாக்க முடியும்.

Back to top button
error: Content is protected !!