தமிழ்நாடு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி – அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க பலர் கோரிக்கை வைத்துள்ளனர். முதற்கட்டமாக 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு தரப்பில் பல கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மே 10 வரை கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மக்கள் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு தரப்பில் மக்கள் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கப்பட்டது.

மேலும் 14 பொருள்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைப்பு சாரா நிறுவன ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என கடந்த ஆண்டு பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த உதவித்தொகை பலருக்கு கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த போது கடந்த ஐந்து ஆண்டுகளாக 75 ஆயிரம் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அரசின் உதவித் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார் எனவும், மற்றவர்களுக்கு அடுத்தடுத்து வழங்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: