தமிழ்நாடு

சென்னையில் வீடுகள் தோறும் காய்ச்சல் பரிசோதனை பணி தொடங்கியது..!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்றுமுதல் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்வது தொடங்கியுள்ளது.

சென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,300-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரும் வெளியே வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த பணி இன்று தொடங்கியுள்ளது.

பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், காய்ச்சல் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.

இதையும் படிங்க:  ‛தலைவி’க்கு தடையில்லை.. தீபா வழக்கு தள்ளுபடி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: