தமிழ்நாடு

52 மாணவர்களுக்கு காய்ச்சல் – பெற்றோர்கள் அச்சம்! மீண்டும் பள்ளிகள் மூடல்?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே கொரோனா நோய்த்தொற்று மெதுவாக பரவ தொடங்கி உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 52 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் மெல்ல இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனவே ஊரடங்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் குறிப்பிட்ட பள்ளிகள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசும் இது தொடர்பாக ஆராய குழுக்களை அமைத்துள்ளது. இந்நிலையில் அடுத்தகட்டமாக தொடக்க, நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி அக்டோபர் முதல் வாரத்தில் 6, 7 & 8 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே மாறாந்தை அரசு பள்ளியில் பயிலும் 52 மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து 104 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படலாம் என கூறப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 சரிவு!
Back to top button
error: