இந்தியா

ஒமைக்ரானிலிருந்து பூஸ்டர் டோஸ் பாதுகாக்குமா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் அவசியம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் உருமாறிய கொரோனா தொற்று உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. இதன் வீரியம் அதிகம் என கூறப்படுவதால், தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளன. இதனிடையே, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஒமைக்ரான் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக எந்த அளவுக்கு செயல்திறன் கொண்டுள்ளது என்பது குறித்தும் மருத்துவ நிபணர்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: