இந்தியா

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DR) உயர்வு – இதோ முழுவிவரங்கள்!

மத்திய அரசுத்துறையில் பணிபுரிந்து கடந்த 2020-21 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அதிகளவு கிராஜூட்டி மற்றும் விடுமுறை கொடுப்பனவுடன் சுமார் 4% முதல் 7% வரை DA பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு உருவான கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த அகவிலைப்படி உள்ளிட்ட மற்ற கொடுப்பனவுகள் அனைத்தும் கிட்டத்தட்ட 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலையும் தற்போது மறையத்துவங்கியுள்ள நிலையில், ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் DR தொகை இந்த ஆண்டு ஜூன் மாத தவணையுடன் திரும்ப கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சில மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு DA தொகை திரும்ப அளிக்கப்படும் என உறுதி செய்துள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு தொடர்புடைய பணிக்கொடை மற்றும் ரொக்கப் பண கணக்கீட்டை சமீபத்தில் வெளியிட்டது.

இந்த கணக்கீட்டை கவனத்தில் கொள்கையில், கடந்த 2021 ல் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் அவர்களுக்கு முந்தைய ஓய்வூதியதாரர்களை விட அதிக அளவு கிராஜூட்டி மற்றும் லீவ் ரொக்கப் பணம் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டுடன் தங்களது சேவை காலம் முடிவடைந்த ஊழியர்களுக்கு DA உதவித்தொகை 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களின்படி, மத்திய அரசு ஊழியர்கள் 01.01.2020 முதல் 30.06.2020 வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றிருந்தால், அவர்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து 21 சதவீத DA உயர்வை பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர 01.07.2020 முதல் 31.12.2020 வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் 24% உயர்வை பெற உள்ளனர். மேலும் 01.01.2021 மற்றும் 30.06.2021 க்கு இடையில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் 28% அளவு DA உயர்வு பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நாடாளுமன்றத்தில் ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்!
Back to top button
error: