இந்தியா

266 போலியான என்.ஜி.ஒ.,க்களுக்கு செக் வைத்த மத்திய அரசு – நிதி உதவி நிறுத்தம்

என்.ஜி.ஓ பெயரின் மூலம் போலியான நிதியைப் பெற்று வந்ததாக ஆடிட்டிங் கணக்கில் கண்டறிய பட்டது. அதில் 266 என்.ஜி.ஓ.க்களுக்கு போலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த 266 போலியான என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது.

போலியான என்.ஜி.ஓ:

என்.ஜி.ஓ என்றால் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் ஆகும். இது தனியாரால் அல்லது அரசு பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புகளாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதி அளிக்கப்படும் அமைப்புகள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்குகாக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.உலக அளவில் 40,00,000 அரசு சார்பற்ற அமைப்புகள் இயங்குவதாக கூறப்படுகிறது.

ngo

இந்நிலையில் தற்போது முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் என்ற பெயரால் நடத்தப்படும் என்.ஜி.ஓக்களின் தொண்டு நிறுவனங்கள் சில போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது. இந்தியாவில் இயங்கி வரும் பல்வேறு என்.ஜி.ஓ.க்கள் மற்றும் தனியார் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து கொடையாளர்கள் வழங்கும் நிதி உதவிகளை பெற்று வருகின்றன.

FAKE

இதனையடுத்து முதன்முறையாக என்.ஜி.ஓக்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 1,276 என்.ஜி.ஓக்களுக்கு மத்திய அரசு தலா ரூ.25 லட்சம் வழங்கி வருகிறது. இந்நிலையில் 266 தொண்டு நிறுவனங்கள் ஆடிட்டிங்கில் முறைகேடு செய்ததாகவும் விதிமுறைகளை மீறியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போலியான வெற்று பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்த 266 என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!