வேலைவாய்ப்பு

ரூ.1,77,500/- சம்பளத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு!!!

மத்திய பட்டு வாரியம் எனப்படும் Central Silk Board புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Scientist B பதவிக்காக உள்ள 15 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்காக வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களை பெற இப்பக்கத்தின் இறுதிவரை காணவும்.

நிறுவனம் – Central Silk Board
பணியின் பெயர் – Scientist B
பணியிடங்கள் – 15
விண்ணப்பிக்க கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

Central Silk Board தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் Scientist B பதவிகளை நிரப்ப 15 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 31.12.2021 தேதியின் படி 35 வயதிற்கு அதிகமாக இருக்க கூடாது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் B.E/ B.Tech படிப்பில் பட்டம் பெற்றவராய் இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை:

Central Silk Board இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

www.csb.gov.in. என்ற அதிகார பூர்வ இணைத்தளத்தின் மூலமாக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன. பதிவாளர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://csb.gov.in/wp-content/uploads/2021/08/Brief-Advt.-24.08.2021.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: