உலகம்

சுற்றுலா செல்ல பணம் இல்லை.. மகனை விற்ற தந்தை..!

சீனாவில் வசிக்கும் ஒருவர் தனது இரண்டாவது மனைவியை சுற்றுலா கூட்டி செல்ல பணம் இல்லாத காரணத்தினால் தனது சொந்த மகனை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனா ஜெஜியாங் பகுதியில் வசித்து வந்த ஷீ என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தபின், நீதி மன்றம் ஷியிடம் 2வயது மகனை ஒப்படைத்தது.

இந்நிலையில் ஷீ வேறு ஊருக்கு வேலையின் காரணமாக சென்றதால் சிறுவனை, தனது சகோதரன் லின் பராமரிப்பில் விட்டுவிட்டார்.

இந்நிலையில், கடந்த மாதம் ஷீ தனது சகோதரனிடம் சென்று மகனை தனது தாய் பார்க்க விரும்புகிறார் என கூறி, சிறுவனை அழைத்துச் சென்றார். சில நாட்களுக்கு பின்னர் சிறுவனை ஷீ அழைத்து வராததால் லின் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர், ஷீ-யிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சாங்ஷு என்ற நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ஷீ 158,000 யுவான் (ரூ .18 லட்சம்) க்கு விற்று, அந்த பணத்தை பயன்படுத்தி, ஷீ தனது 2-வது மனைவியை சுற்றுலா கூட்டி சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்த தம்பதியினர் மீது, குற்றவியல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சீனாவில் சமீப ஆண்டுகளாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: