தமிழ்நாடுமாவட்டம்

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தந்தை, மகன்.. மின்னல் தாக்கி பரிதாபமாக பலி..!

அருப்புக்கோட்டை அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தந்தையும், மகனும் மின்னல் தாக்‍கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தூர்பாண்டியன் என்பவர், தனது மகன் ராஜேஷூடன் அருகே உள்ள காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்ததால், அங்கிருந்த மரத்தின் கீழே மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது இடி மின்னல் தாக்கியதில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இடி மின்னல் தாக்கி, தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம், நத்தம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  கொரோனா பரவல் எதிரொலி.. சுற்றுலா தலங்கள் மூடல்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: