மாவட்டம்தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் திராட்சை பழங்கள் வெடித்து உதிர்வதால் விவசாயிகள் கவலை..!!

தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், திராட்சை பழங்கள் வெடித்து உதிர்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. அவை, அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர் மழையால், திராட்சை பழங்கள் வெடித்து அழுகி வருகின்றன. இதனால், கட்டுபடியாகாத விலைக்கு வியாபாரிகள் கேட்பதால், கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேபோல், திருச்சி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அரசங்குடி, நடராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள், தண்ணீர் மூழ்கி உள்ளன. காவிரி, கல்லணை வடிகால் வாய்க்கால்கள் மற்றும் மதகுகள் தூர்வாரப்படாததால், மழைநீர் வெளியேற வழியின்றி, வயல்களில் தேங்கி உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...
Back to top button
error: Content is protected !!