இந்தியா

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப பென்சன் – இதோ முழு விபரம்!!

இந்தியாவில் ஓய்வூதியதாரர்களின் மகள் கணவனை இழந்தாலோ அல்லது விவாகரத்து பெற்றாலோ அவர்களுக்கு குடும்ப பென்ஷன் வழங்குவது குறித்து பென்ஷனர்கள் நல அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் மத்திய, மாநில அரசு வேலைகளில் இருப்போர் ஓய்வு பெறும் போது அவர்களின் பணி காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் ஓய்வுக்கு பிறகு மாதந்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்படும். ஓய்வு காலத்தில் அரசால் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையானது அவர்கள் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களுக்கு பேருதவியாக உள்ளது. மேலும் பின் காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்க்கையை நடத்த ஏதுவாக இந்த பென்ஷன் தொகை வாங்கும் நபர் இறந்தால் அவர்களது கணவன் அல்லது மனைவிக்கு அந்த தொகை அவர்கள் இறக்கும் வரை வழங்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய பென்ஷன் மற்றும் பென்ஷனர்கள் நல அமைப்பு 75 அம்ச விதிமுறைகளை வெளியிட்டது. அதில் விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகள் குடும்ப பென்சனை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகளை உள்ளது. அதன் படி ஓய்வூதியம் பெறும் நபர் தனது மகள் விதவை அல்லது விவாகரத்து பெற்றவர் என்பதை பென்சன் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னரே விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகளுக்கு குடும்ப பென்ஷன் மாதந்தோறும் கிடைக்கும்.

விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகளின் பெற்றோர் உயிரோடு இருந்தால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும். பெற்றோர் இறந்த பிறகு விவாகரத்து கிடைத்திருந்தால் அதற்கான உரிய சான்றிதழ்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போது தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அப்போது அது செல்லுபடியாகும். மேலும் குடும்ப பென்சனானது விவாகரத்து பெற்ற தேதியிலிருந்து வழங்கப்படும் என்று பென்ஷனர்கள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம்; கர்நாடக முதல்வர் தகவல்!
Back to top button
error: