இந்தியா

முகக்கவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் – முதல்வர் அதிரடி உத்தரவு..!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது, முகக்கவசம் அணிவது. தற்போது டெல்லியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்கள் அபராத தொகையாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கொரோனா நோய் பரவல் அச்சம்:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த நோய்க்கான மருந்து மற்றும் தடுப்பூசி இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிலும், குறிப்பாக அரசு சில நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்தியது.

முகக்கவசம் அணிவது, கை கால்களை தொடர்ந்து சுத்தம் செய்வது, சமூக இடைவெளியினை பின்பற்றுவது போன்றவை கடந்த மார்ச் மாதம் முதல் அனைவரும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், இதனை முறையாக பின்பற்றிய மக்கள் நாளாக நாளாக அதனை அலட்சியப்படுத்தினர். கொரோனா பரவல் தற்போது டெல்லியில் அதிகரித்து வருகின்றது. வெளிநாடுகளில் கொரோனா 3வது அலை பரவுவது போல் டெல்லியிலும் பரவுகிறது.

KejriwalCoronavirus 1

இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஹாட்ஸ்பாட் பகுதிகள், காய்கறி சந்தை போன்ற பகுதிகளுக்கு முழு பொது முடக்கத்தினை அறிவிக்க மத்திய அரசு அனுமதி கோரியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன. டெல்லியில் இனி முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு மக்கள் வந்தால் அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!