ஆரோக்கியம்தமிழ்நாடு

தப்பி தவறி கூட அதிகாலையில் இந்த உணவுகளை எடுத்து கொள்ளாதீங்க.. ஆபத்தை ஏற்படுத்துமாம்!

பொதுவாக அன்றைய நாளை உற்சாகத்துடன் வைத்து கொள்ள காலை உணவு பெரிதும் உதவாக இருக்கின்றது.

நமது மனநிலையை உயர்த்தவும் மேலும் நம்மை ஊக்குவிக்கவும், சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

ஆனால் நம்மில் சிலர் வேலைக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவை தவிர்த்து விடுகின்றார்கள் மற்றும் தவறான சில உணவுகளையும் எடுத்து கொள்கின்றனர்.

உண்மையில் அதிகாலையில் தவறான உணவு தேர்வு செய்வதன் மூலம் செரிமான கோளாறுகளின் அபாயத்திற்கு வழிவகுக்கும்.

அந்தவகையில் அதிகாலை உணவிற்கு தவிர்க்கவேண்டிய உணவுகளின் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

  • பச்சை காய்கறிகள் அனைத்தும் நார்ச்சத்து நிறைந்தது, இது காலையில் அருந்துவதால் ஜீரணமாக கடுமையாக இருக்கும். பச்சை காய்கறிகளை காலையில் எடுத்துக்கொண்டால் வாயு, வயிறு உபசம், வயிற்று போக்கு இவைகளுக்கு வழிவகுக்கும்.
  • ஆரஞ்சு மற்றும் தக்காளி போன்ற சிட்ரிக் பழங்கள் வைட்டமின் c நிறைந்தவை. இருப்பினும் அதிகாலையில் இந்த பழங்களை எடுத்துக்கொள்வதால் எரிச்சல்,நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
  • ஒரு சூடான கப் காப்பியுடன் நாளை தொடங்குவது சாதாரண விஷயம் தான். ஆனால் வெறும் வயிற்றில் காப்பி குடிப்பதினால் வயிற்றில் அமில சாறின் உற்பத்தி அதிகரிக்கிறது, இது இரைப்பை அழற்சி பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
  • பாக்கெட் பானம் பெரும்பாலும் சர்க்கரையால் நிரம்பியுள்ளது. காலையில் சர்க்கரை சேர்ந்தவற்றை நாம் உண்பது, நீண்ட நேர ஓய்வுக்கு பிறகு விழித்திருக்கும் உங்கள் கணையத்திற்கு நல்லதில்லை.
  • அதிகாலையில் தவிர்க்க வேண்டிய மற்றொரு பழம் வாழைப்பழம். இதனை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் போது ரத்தத்தில் உள்ள இரண்டு தாதுக்களின் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும்.
  • தயிரில் காணப்படும் லாக்டிக் அமில பாக்டீரியா அதிக அமிலத்தன்மை கொண்டதால் இதை காலையில் உட்கொள்ளும்போது பயனற்றதாகிவிடும். நன்பகலில் தயிர் சாப்பிடுவது நல்லது.

loading...
Back to top button
error: Content is protected !!