ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்கள்!

கண்களை வைத்து நம்மால் தற்போதுள்ள உடல் ஆரோக்கியத்தின் நிலையை பற்றி தெரிந்து கொள்ளலாம். அதற்காகத் தான் உடல் நிலை சரியில்லை என்று மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் முதலில் கண்களை பரிசோதிக்கின்றனர். ஆகவே நாமும் நமது கண்கள் எப்படி இருந்தால், என்ன பிரச்சனை என்பதை ஈஸியாக தெரிந்து கொள்ளலாம்.

மங்ககலான பார்வை:

பொதுவாக இந்த பிரச்சனை கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும். ஏனெனில் கணினியில் உள்ள பிக்சர்களின் அமைப்பு சரியாக இல்லாததாலும், இந்த நிலை ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் சிலருக்கு கண்களில் இருந்தும் கண்ணீர் வரும். மேலும், கண்களில் உள்ள லூப்ரிகேட்டிங் ஏஜென்ட் இல்லாத காரணத்தினால், கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. அதிகம் மங்கலான பார்வை இருந்தால் அது நீரிழிவிற்கு ஒருவிதமான அறிகுறியாக கூட இருக்கும்.

சிவப்பு மற்றும் எரிச்சல் கண்கள் :

கண்கள் சிவப்பாகவும், எரிச்சலுடனும் இருந்தால் அது சைனஸ் மற்றும் சளியின் அறிகுறி. மேலும் சில நேரங்களில் அலர்ஜியின் காரணமாகவும், கண்களுக்கு போடும் மேக்கப் செட்டில் இருக்கும் கெமிக்கல்களின் மூலமாகவும் வரும். அதுமட்டுமல்லாமல் கண்களுக்கு தேவையில்லாமல் கண்களுக்கான மருந்துகளை பயன்படுத்தினாலும் ஏற்படும்.

வெளிர் நிற கண்கள்:

இந்த நிறத்தில் கண்கள் இருந்தால் உடலில் கல்லீரல், பித்தபை மற்றும் பித்த நாளங்கள் சரியாக இயங்காததால் ஏற்படுகிறது. மேலும் கண்களில் இருக்கும் வெள்ளை நிறப்பகுதி மட்டும் நன்கு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அவர்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்க்ப்பட்டுள்ளனர் என்பதை அறியலாம்.

வீக்கமான கண்கள்:

கண்கள் வீக்கத்துடன் காணப்பட்டால் உடலில் குறைபாடு உள்ளது என்பதை காட்டுகிறது. அதுவும் தைராய்டின் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே அப்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆனால் சில சமயங்களில் அது எந்த வித காரணமும் இல்லாமல் இருக்கலாம். ஆகவே என்னவோ, கண்கள் வீக்கத்துடன் காணப்படுகிறதென்று யாராவது கூறினாலோ, உங்களுக்கே தோன்றினாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

வறட்சியான கண்கள்:

கண்கள் வறட்சியுடன் காணப்பட்டால் உடல்நிலையில் குறைபாடு மிகுந்துள்ளதை காட்டுகிறது. மேலும் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ளது. இதனால் உடலில் நோய்கள் எளிதில் நுழையும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த நிலையை தவிர்க்க, நிறைய தண்ணீர் பருக வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவுகளை உண்ண வேண்டும்.

இதையும் படிங்க:  பாயில் உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: