தமிழ்நாடுமாவட்டம்

கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி..!

சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை, இன்று திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38 ஆயிரம் ரூபாயை தொடும் அபாயத்தில் உள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல்வேறு ஈடுசெய்ய முடியாத இழப்புகள் பொருளாதாரத்தில் ஏற்பட்டன. இதனால் பிற துறை பங்குகள் சரிந்ததால், பங்குச்சந்தையில் வரலாறு காணாத மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களின் மீது முதலீடுகள் அதிகரித்ததால், விலையும் உயர்ந்து கொண்டே சென்றது. ஊரடங்கு காலத்தில் தினசரி ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த விலை ஆகஸ்ட் மத்தியில் உச்சத்தை தொட்டது.

gold jewels 2

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை ஆனது. இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து கொண்டே சென்றது. தொடர்ந்து 3வது நாளாக குறைந்து வந்த விலை, இன்று திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.5 உயர்ந்து ரூ.4,745க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் உயர்ந்து ரூ.37,960க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து ரூ.66,500 ஆக உள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!