வேலைவாய்ப்பு

சூப்பரான வேலை! ரூ.1,12,400/- சம்பளத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய தொலைத்தொடர்பு துறையில் இருந்து காலியாக உள்ள Senior Accountant, Junior Accountant, Lower Division Clerk & MTS பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது முன்னதாக வெளியானது. அதில் இப்பணிகளுக்கு 33 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில அரசு/ பொதுத்துறை/ தன்னாட்சி துறைகளில் அல்லது நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராகவும், பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
  • கணினி உபயோகிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.08.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification – https://dot.gov.in/sites/default/files/Vacancy%20Circular_1.pdf?download=1

Official Site – https://dot.gov.in/latest-updates

இதையும் படிங்க:  கன்னியாகுமரி அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலை – வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: