ஆன்மீகம்தமிழ்நாடு

உங்க வீட்டின் அடுத்த சந்ததியினருக்கு கூட, பண கஷ்டம் வராது.. இந்த ஒரு பொருள் உங்க வீட்டுல இருந்தா?

நம்முடைய குடும்பமானது இந்தத் தலைமுறையிலும் நன்றாக இருக்க வேண்டும். வரப்போகின்ற அடுத்த தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டும், என்றுதான் நம் வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் நினைப்பார்கள். அதை நினைத்துதான் குல தெய்வ வழிபாட்டையும் நாம் செய்து வருகின்றோம். இப்படி இருக்கும் பட்சத்தில், ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்க நம்மால் முடியவில்லை என்றாலும், நமக்கு வரப்போகின்ற அடுத்த சில சந்ததியினருக்கு பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கும் அளவிற்கு, நாம் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். அதுதான் நல்ல வாழ்க்கையும் கூட.

cash2 kMHD

முடிந்தவரை நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு சொத்து சேர்த்து வைக்கின்றமோ இல்லையோ, கட்டாயம் கடனை சேர்த்து வைத்து விடாதீர்கள். அது மிகப் பெரிய பாவம். இப்படியாக நம்முடைய குடும்பம், தலைமுறை தலைமுறையாக நன்றாக இருக்க வேண்டும் என்றால், அதற்காக என்ன செய்யலாம்? என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நாட்டு மருந்து கடைகளில் விற்க கூடிய பொருள் இது. அவ்வளவு சுலபமாக கிடைக்காது. முன்கூட்டியே சொல்லி வைத்து விடுங்கள். இது ஒரு தேங்காய் ரகத்தை சேர்ந்தது தான். இந்த தேங்காயை, கொம்பு தேங்காய் அல்லது கனகலட்சுமி தேங்காய் என்று சொல்லுவார்கள். எல்லா தென்னை மரங்களிலும் இந்த தேங்காயானது காய்த்து விடாது. அரிய வகையாக இருக்கக்கூடிய ஒரு ரக தேங்காய் தான் இது.

kombu thengai

ஆனால், மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த இந்த தேங்காயை நம் வீட்டில் வைத்தால் மிகவும் நல்லது. எந்த முறைப்படி பூஜை செய்து, இந்த தேங்காயை வைக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம். நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து விட்டு, ஒரு பௌர்ணமி தினத்தில் இந்த தேங்காயை உங்கள் வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். அதன் பின்பு தேங்காயை சுத்தமான மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவி விடுங்கள்.

ஒரு தாம்பாளத் தட்டில் சிறிதளவு பச்சரிசியை பரப்பி, அதன் மேல் இந்த தேங்காயை, நிற்க வைத்து, தேங்காய்க்கு குங்குமப் பொட்டு வைத்து, ஒரு பூவும் வைத்து, பூஜை அறையில் வைத்து விடவேண்டும். பௌர்ணமி தினத்தில், காலை இந்த பூஜையை உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்யுங்கள்.

poojai arai

அதன் பின்பாக வெள்ளிக்கிழமை, பூஜை செய்வது போல உங்கள் வீட்டு பூஜை அறையில், விளக்கு ஏற்றி வைத்து, தீப தூப ஆராதனைகள் காட்டி, இந்த தேங்காய்க்கும் சேர்த்துக் தீப தூப ஆராதனை காட்டி, உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது காலை நேர பூஜை நிறைவடைந்து விட்டது. அந்த தேங்காயானது உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும்.

இதையும் படிங்க:  அளவுக்கு அதிகமாக முடி கொட்டுதா? அதை உடனே நிறுத்தலாம்?

மாலை 6 மணிக்கு பௌர்ணமி தினத்தில், சந்திரன் உதயமாகும் அந்த சமயத்தில், மீண்டும் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, அந்த தேங்காயை சந்திரபகவான் உதயத்தில் காண்பிக்க வேண்டும். அதாவது சந்திர பகவான் உங்கள் கண்களுக்கு தெரிந்த பின்பு, தேங்காயை தாம்பூலத் தட்டோடு எடுத்து கொண்டு போய், மொட்டை மாடியிலோ அல்லது உங்கள் வீட்டு பால்கனிலோ, உங்கள் கைகளிலேயே வைத்துக்கொண்டு சந்திர பகவானை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். கூடவே சேர்த்து உங்களுடைய குல தெய்வத்தையும் வேண்டிக்கொள்ளுங்கள்.

Moon

உங்களது குடும்பம் இன்று போல் என்றும் செழிப்பாக வாழ வேண்டும். வருமானத்திற்கு குறைவு ஏற்படக் கூடாது. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். என்ற படியாக உங்களுடைய குடும்பத்திற்காக மனதார வேண்டுதல் வைத்து, அதன் பின்பு ஒரு சிவப்புத் துணியில் அந்த தேங்காயை நன்றாக கட்டி, உங்கள் வீட்டு நில வாசற் படிக்கு உள்பக்கத்தில், மாட்டி வைத்து விடவேண்டும். நிலவசல் படிக்கு வெளியே மாட்டக் கூடாது. முடிந்தால் சிகப்பு நிற துணியில் ஒரு பையை தைத்து, அதில் இந்த தேங்காயை போட்டு மாட்டினாலும் உத்தமம்.

மாட்டிய தேங்காயை அப்படியே விட்டு விடுங்கள். அந்த தேங்காய் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை . அப்படியே இருக்கட்டும். உங்களுடைய குடும்பம் அல்ல, உங்களுக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கு கூட எந்தவிதமான கஷ்டமும் ஏற்படாமல் இந்த தேங்காய் பார்த்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை. வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் பூஜை செய்யும் போது தேங்காய்க்கும் சேர்த்து தீப ஆராதனை காட்டி விடுங்கள்.

vasal kathavu

வேண்டுமென்றால், மேலே இருக்கக்கூடிய சிவப்பு துணியை மட்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை எடுத்து துவைத்து மாற்றிக் கொள்ளலாம். அப்போது அந்த தேங்காயை, உங்கள் பூஜை அறையில் பத்திரமாக வைத்து விட்டு துணியை மாற்றி கொள்ள வேண்டும். தேங்காயை எப்போதுமே வெறும் தரையில் கீழே வைக்கக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எச்சில் படாத ஒரு தட்டின் மேல் வைத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: