ஆரோக்கியம்தமிழ்நாடு

தீக்காயம் படும்போதும் மறந்து கூட இந்த வீட்டு வைத்தியங்களை செய்யாதீங்க.. மோசமான விளைவுகளை தருமாம்!

பொதுவாக வீட்டில் சமைக்கும் போது சில சமயங்களில் தவறுதலாக தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம்.

பெரும்பாலும் தீக்காயங்கள் தோலின் வெளிப்புற அடுக்கை மட்டுமே பாதிக்கும். இது லேசான வலி தோல் சிவத்தல் மற்றும் வீக்கம் ஏற்படும்.

அச்சமயம் நம்மில் பலர் சின்ன சின்ன தீக்காயங்களுக்கு மருத்துவமனைக்குப் போகாமல் நாம் வீட்டிலேயே ஏதாவது வைத்தியம் செய்து விடுகிறோம்.

ஆனால் அவை தீக்காயங்களை மேலும் மோசமாக்கும். அதனை ஒரு போதும் முயற்சிக்க கூடாது.

அந்தவகையில் தற்போது தீக்காயங்கள் ஏற்பட்ட பின் செய்யக்கூடாத வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வெண்ணெயை தீக்காயத்தில் பயன்படுத்துவதன் மூலம் அது உங்கள் தீக்காயத்தை மேலும் மோசமாக்கும். மேலும் வெண்ணெய் எரிந்த சருமத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கும். மட்டுமின்றி வெண்ணெய் எரிந்த சருமத்தை பாதிக்கக்கூடிய பாக்டீரியாக்களை கொண்டிருக்கலாம்.
  • தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது அது நிச்சயம் உங்கள் காயங்களை குணப்படுத்துவதற்கு பதில் மேலும் மோசமாக்கும்.
  • சமைக்கப்படாத முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகப்பட்சமான பாக்டீரியாக்கள் இருக்கும். இவற்றை பயன்படுத்துவதால் தீக்காயம் பட்ட இடத்தில் பாக்டீரியா தொற்று அதிகமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் முட்டைகள் ஒவ்வாமை எதிர் வினைக்கு வழி வகுக்கும்.
  • பற்பசையை தீக்காயங்களை மேலும் மோசமாக்கவே செய்கின்றது. பற்பசையில் உள்ள பொருட்கள் தீக்காயங்களை மேலும் எரிச்சலடைய செய்து அதிக சேதத்தை ஏற்படுத்தும். இது மோசமான பாக்டீரியாக்களின் உற்பத்திக்கும் வழி வகுக்கலாம்.
  • தீக்காயத்தின் மேல் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரை வைப்பது தீக்காயங்களை மேலும் மோசமாக்கும். முறையற்ற முறையில் இவற்றை பயன்படுத்தினால் அதனால் தீக்காயம் மோசமாக கூடும்.

loading...
Back to top button
error: Content is protected !!