உலகம்

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர் டேவிட் சசோலி காலமானார்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தலைவர் டேவிட் சசோலி இன்று அதிகாலை இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் காலமானார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் தெரிவித்தார்.

65 வயதான அவர் கடந்த டிசம்பர் 26 முதல் தனது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயலிழப்பு காரணமாக இரண்டு வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவரது அலுவலகம் திங்களன்று அறிவித்தது.

இந்த நிலையில் இத்தாலியின் அவியானோவில் உள்ள மருத்துவமனையில் ஜனவரி 11 இன்று அதிகாலை 1:15 மணியளவில் டேவிட் சசோலி காலமானார்.

அவரது செய்தித் தொடர்பாளர் ராபர்டோ குய்லோ டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “டேவிட் சசோலி ஜனவரி 11 இன்று அதிகாலை 1.15 மணியளவில் இத்தாலியின் அவியானோவில் CROஇல் உயிரிழந்தார், இறுதிச்சடங்கு நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் சில மணி நேரத்தில் தெரிவிக்கப்படும்” என்றார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: