ஆரோக்கியம்

வெட்டிவேரின் இன்றியமையா மருத்துவ பயன்கள்!

வெட்டி வேரினை விலாமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். இந்தியாவை தாயகமாகக் கொண்ட வெட்டிவேர், பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். இது புல் வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இதற்கு, விழல் வேர், விரணம், இருவேலி, குருவேர் போன்ற வேறு பெயர்கள் உள்ளன. புல்லுக்கும், வேருக்கும் இடைப்பட்ட பகுதியை வெட்டி எடுத்து பயிரிடப்பயன்படுவதால் ‘வெட்டிவேர்’ என்றும், ஆற்றின் இருகரைகளிலும் வேலியாக அமைந்து மண் அரிப்பைத் தடுப்பதற்காகப் பயன்பட்டதால் ‘இருவேலி’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டது. வெட்டிவேர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது. இதிலிருந்து எடுக்கப்படும் தைலமும் நறுமணம் கொண்டது. இதனை மணமூட்டியாக தைலங்களிலும், குளியல் சோப்புகளிலும், பயன்படுத்துவதுண்டு. மேலும் வெட்டிவேரின் பயன்கள் குறித்து பார்க்கலாம்.

பயன்கள்

வெட்டிவேரில் உள்ள மெத்தெய் ஐசோயூனால் என்ற வேதிப்பொருள் ஆன்டி பாக்டியா மற்றும் ஆன்டிசெப்டிக் ஆகவும் செயல்படுகிறது. இதனால் புண்களில் ஏற்படும் கிருமிகளை தடுக்கவும், பூஞ்சை போன்ற நுண்ணியிரிகளை கொல்லவும் வயிற்றுப்பகுதியில் உள்ள பெருங்குடல், சிறுகுடல், சிறுநீர்ப்பை, சிறுநீரகப்பாதை, சிறுநீரக, பிராஸ்டேட் சுரப்பி போன்ற இடங்களில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கிறது.

வெட்டிவேர் எண்ணெய் கல்லிரல், இரைப்பை, உணவுப்பாதையில் உள்ள வீக்கங்களையும் குணப்படுத்துகிறது. இந்த எண்ணெயை உடலின் மேல் தேய்த்து குளிப்பதன் மூலம் சதை இருக்கம் மற்றும் உடல் வலியை நீக்குகிறது.

பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலியை போக்குகிறது.

இதை களிம்பாகவும், சோப்பாகவும் பயன்படுத்துவதன் மூலம் தோல் வறட்சி மற்றும் முகப்பரு ஆகியவை குணப்படுத்தப்படுகிறது.

வெட்டிவேரின் புகையை கொசுக்கள் உள்ள பகுதியில் போடுவதால் கொசுக்கள் அண்டாது. வெட்டிவேரின் ஊதுபத்தி நல்ல மன அமைதியை கொடுக்கும்.

வெட்டிவேர் ஆண்மையை பெருக்கும், பித்த நோயை குணப்படுத்தும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலை குறைக்கும், தீப்புண்ணுக்கு மருந்தாக பயன்படுகிறது.

வெட்டிவேர் வாந்தி, பேதிக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.

வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

வெயில் காலங்களில் உடம்பில் ஏற்படும் வியர்வை, துர்நாற்றத்தை நீக்க வெட்டி வேரினை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, அந்த விழுதினை சுடு தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.

துண்டுகளாக வெட்டிய வெட்டிவேர் சிறிதளவு, கொட்டை நீக்கிய கடுக்காய் இவை இரண்டையும் முதல் நாள் இரவே சுடுநீரில் போட்டு ஊற வைத்து விடவேண்டும். மறு நாள் அதை அரைத்து விழுதாக்கி அந்த விழுதை பருக்கள் மீது தடவி வர பருக்கள் தழும்பு இல்லாமல் மறைந்துவிடும்.

இதையும் படிங்க:  தினந்தோறும் சாப்பிடுங்கள் புதினா!

விவசாயிகளுக்கு உரமாகவும், மண்ணரிப்பை தடுக்கவும் பெரிய அளவில் பயன்படுகிறது.

ஆன்மிகத்தில்

வெட்டிவேரை சிவ பெருமானுக்கு, அபிஷேக தீர்த்தமாகவும், மாலையாகவும் பூஜை செய்வது வழக்கம்.

இவ்வாறு சுவாமிக்கு அணிவிக்கும் வெட்டிவேரை பக்தர்கள் வாங்கி தண்ணீரில் ஊறவைத்து 48 நாட்கள் வரை பருகி வர உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் விநாயகருக்கும், குருமார்களுக்கும் மாலையாக அணிந்து வணங்குவது வழக்கம்.

திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிதம்பரம் என முக்கிய திருத்தலங்களில் இருக்கும் நடராஜர் மற்றும் சுவாமி திருமேனிகளை அலங்கரிப்பதில் முதலிடம் வகிப்பது வெட்டிவேராகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: