கன்னடர் மற்றும் தெலுங்கர்களின் புத்தாண்டு தினமான தெலுங்கு வருட பிறப்பு என்னும் உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வேம்பு-வெல்லக் கலவையை உறவினர்களுக்கு கொடுத்து உகாதி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெல்லம் – 100 கிராம்,
புளி – 50 கிராம்,
மாங்காய் – 1,
வேப்பம்பூ – அரை கப்,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – ஒரு துண்டு,
உப்பு – சிறிதளவு
வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து ஒரு டம்ளர் அளவுக்குக் கெட்டியான கரைசலாக எடுத்துக் கொள்ளவும். மாங்காயினைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெல்லம், புளிக்கரைசல், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து நன்றாகக் கிளறினால் உகாதி பச்சடி தயார்..!