20221213 142803

தேங்காய் பர்பி ஈசியாக செய்யலாம் வாங்க..!

குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் பர்பி ஈசியாக செய்து ருசிக்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் = 1 காப்பு நிறைய
சர்க்கரை = 1 கப்பு
நெய் = 50 மில்லி
ஏலக்காய் தூள் = 1 ஸ்பூன்
முந்திரி = 10 பீஸ்

செய்முறை

முதலில் தேங்காய் துருவலை மிக்ஸியில் பாதியளவு அரைத்து வைக்கவும். முத்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கம்பி பதத்திற்க்கு பாகு காய்ச்சி வைக்கவும்.

பாகு தயாரானதும், இதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறவும். தேங்காய் மற்றும் சர்க்கரை பாகு சுருண்டு வரும் வேளையில், இதனுடன் வறுத்து வைத்த முந்திரி, ஏலக்காய் தூள் கொஞ்சம் நெய் சேர்த்து லேசாக கிளறவும். ஒரு தட்டில் நெய் தடவி அதில் தயாரான பர்பி யை ஊற்றி ஆற வைக்கவும். பாதி ஆரியதும் கத்தியால் வெட்டி சிறிய துண்டுகளாக பிரித்து வைக்கவும். நன்கு ஆரியதும் எடுத்து பரிமாறவும். (விரும்பமானால் பிஸ்தா, பாதாம் சேர்த்து கொள்ளலாம்)