தற்போது அடிக்கின்ற வெயிலுக்கு இதமாக இருக்கும் கேரட் ஐஸ் கிரீம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாக ஐஸ் கிரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆனால் பலரும் ஐஸ் கிரீம்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறார்கள். அதிலும் சிலர் மொத்தமாக ஐஸ் கிரீம்களை வாங்கி வந்து பிரிட்ஜில் வைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் கேரட் மட்டும் இருந்தால் போதும் மிகவும் சுவையான ஐஸ் கிரீம் 10 நிமிடத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதனால் இந்த பதிவை முத்தாக படித்து கேரட் ஐஸ் கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தேவையானவை
பால் – 800 ml
கேரட் – 300 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
Starch – 20 கிராம்
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும். பின் அதில் பால் 800 ml அளவிற்கு ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் 300 கிராம் கேரட்டை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து கொள்ளவும்.
அடுத்து சர்க்கரை 100 கிராம் அல்லது உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அதில் 20 கிராம் ஸ்டார்ச் (Starch) சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அனைத்தும் சேர்த்து கெட்டியாக வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
பின் மிக்சி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். அதில் நாம் செய்து வைத்துள்ளதை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி உங்கள் வீட்டு பிரிட்ஜ் ஃப்ரீசரில் 5 லிருந்து 6 மணி நேரம் வரை வைத்து விட வேண்டும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் ஐஸ் கிரீம் ரெடி. இதை எடுத்து உங்கள் வீட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம்.