சாப்பாட்டிற்க்கு இணை உணவாக அருமையான புடலங்காய் பால் கூட்டு ஈசியாக செய்யும் முறை..
தேவையான பொருட்கள்:
புடலங்காய் = 1 கிலோ
காராமணி = 150 கிராம்
பால் = 1 டம்ளர்
பச்சை மிளகாய் = 4 பீஸ்
தேங்காய் = 1/2 மூடி
கடுகு = 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்= 3 பீஸ்
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து
முதலில் காராமணியை ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். தேங்காயை அரைத்து தேங்காய் பால் கெட்டியாக தயார் செய்யவும். புடலங்காயை சிறுய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். இதில் மஞ்சள் தூள், 1 டம்ளர் பால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
புடலங்காய் வெந்ததும், வேகவைத்த காராமணியை சேர்க்கவும். தேங்காய் சக்கையுடன் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து புடலங்காய், காராமணியுடன் சேர்த்து கொதிக்க விடவும். இவை நன்கு கொதித்ததும் கீழே இறக்கி தேங்காய் பாலை ஊற்றி கிளறவும்.பின்னர் கடுகு,கருவேப்பிலை , காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, இதனுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறவும்.
இப்போது சுவையான புடலங்காய் பால் கூட்டு தயார்!!