-Advertisement-
ஸ்வீட் கடை டேஸ்டில் வீட்டிலேயே சுலபமாக ஜாங்கிரி செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
-Advertisement-
மைதா = கால் கிலோ
சர்க்கரை = முக்கால் கிலோ
டால்டா = அரை லிட்டர்
தயிர் = இரண்டு ஸ்பூன்
ஆரஞ்சு பவுடர் = 2 ஸ்பூன்
மைதா மாவுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தயிர் இரண்டு ஸ்பூன், ஆரஞ்சு கலர் பவுடர் சேர்த்து கட்டியாக கரைத்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். ஒரு கடாயில் சர்க்கரையை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி, பாகு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் டால்டாவை ஊற்றி சூடேற்றவும், நன்கு சூடு ஏறியதும் பிசைந்து வைத்த மாவை முறுக்கு பிழியும் அச்சில் ஊற்றி வைத்து, வாணலியில் வட்டமாக பிழியவும், நன்கு பொரிந்ததும், கீழே இறக்கி வைக்கவும். பொறித்து எடுத்த மைதா மாவு கலவையை, சர்க்கரைபாகில் நன்கு ஊற வைக்கவும். பிறகு எடுத்து பரிமாறலாம்.
இப்போது இனிப்பான ஜாங்கிரி தயார்!!
-Advertisement-