உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. உளுந்தங்களி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் உளுந்து
- 1 மேஜைக்கரண்டி அரிசி
- 1/2 கப் + 1 மேஜைக்கரண்டி வெல்லம் அல்லது
- கருப்பட்டி பொடித்து
- 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்
செய்முறை:
உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். ஆறியபின் மிக்சியில் நைசாக மாவாக அரைக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில், வெள்ளம்/ கருப்பட்டி சேர்த்து, அரை கப் + 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அரைத்த மாவை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஒரு விஸ்க் கொண்டு உடனே கட்டி இல்லாமல் கலக்கவும். மேலும் 1/4 கப்+ 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்கவும்.
கை விடாமல் கலந்துகொண்டு இருப்பது அவசியம். இல்லையென்றால் அடி பிடிக்கும்.
கிண்டும் பொழுது, ஒரு சமயத்தில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
களி வெந்து, ஓரத்தில் ஒட்டாமல் வந்தவுடன், கையை தண்ணீரில் நினைத்து, களியை தொட்டுப் பார்த்தால் ஒட்டக்கூடாது. இப்பொழுது அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு:
- உளுந்தும், அரிசியும் வறுக்கும் பொழுது, மிதமான தீயில் வறுத்தால் தான், கருகாமல், உள் வரை வறுபடும்.
- எண்ணெய், ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை சேர்த்துக்கொள்ளவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh