சூப்பரான சுவையில் தக்காளி தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருள்கள்:
தோசை மாவு – 1 கப்
சிறிய தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 10
மிளகாய் வத்தல் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
மல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – சிறிது
தக்காளி, வெங்காயம் இரண்டையும் வெட்டி வைக்கவும். மிளகாய் வத்தலை இரண்டாக ஒடித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை வறுத்து தனியே வைக்கவும்.
அதே எண்ணெயில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் சீரகம், சிறிது உப்பு,மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும். வதக்கிய பொருள்களை சிறிது நேரம் ஆறவிடவும்.
நன்கு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து தோசை மாவோடு சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் தேய்க்கவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விடவும்.
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.