உடனடி டிபன் என்றால் அது சேமியா கிச்சடிதான். அதையும் அருமையான சுவையில் இதை தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சேமியா – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
கேரட் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 மேஜைக் கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் ஆகியவற்றை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும். அனைத்தும் வதங்கியதும், 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்கும்போது சேமியாவைப் போட்டு லேசாக கிளறி விடவும். அடுப்பை சற்று குறைந்த தீயில் எரியவிட்டு, சேமியா நன்கு வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
Leave a Comment