உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளில் கம்பு மிக முக்கியமானது, இப்போது கம்பை பயன்படுத்தி ஈசியாக கம்பு தோசை செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- Advertisement -
கம்பு = 1 கப்பு
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
உளுத்தம் பருப்பு = 1/2 கப்பு
வெந்தயம் = 1/2 கப்பு
- Advertisement -
முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும், பிறகு இதே போல கம்பையும் தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். இவை இரண்டையும் தனியே 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கம்பு இரண்டையும் தனியே மென்மையாக அரைத்து வைத்து, ஒரே பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு கலக்கி ஒரு இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் கம்பு தோசை மாவினை ஒருமுறை கலக்கி பின் தோசையாக தவாவில் ஊற்றி பரிமாறலாம்.
சுவையான, ஆரோக்கியமான கம்பு தோசை தயார்!!