-Advertisement-
தேவையான பொருட்கள் :
- முட்டை – 6
- சீரகம் – 1 தேக்கரண்டி
- தேங்காய் – 1 மூடி
- பட்டை – 2 துண்டு
- கிராம்பு -2
- சோம்பு – 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் – 20
- பூண்டு – 6 பல்
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
-Advertisement-
முட்டையை வேக வைத்து, ஓடு நீக்கி, அங்கங்கே கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.
வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், வெங்காயம், பூண்டு, சோம்பு, மஞ்சள்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துறுவி பால் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சீரகம் போட்டு தாளித்து அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.
மஸாலா நன்றாக வதங்கியதும் தேங்காய்ப்பால் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறவும்.
குருமா, கெட்டியானதும் முட்டைகளை போட்டு, கிளறி இறக்கி பரிமாறவும்.
-Advertisement-