தேவையான பொருட்கள்:
பால் – 5 கப்
சர்க்கரை – 1 கப்
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
ராகி மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
பால் – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் அதை ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.
பின்னர் நெய் சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாக கெட்டியாக அவை உடையாதவாறு உருட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியில் பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின்னர் அதில் ராகி உருண்டைகளை சேர்த்து ஏழு நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், ராகி பால் கொழுக்கட்டை தயார்.