ஓட்ஸ், கோதுமையை பயன்படுத்தி சத்தான தோசை எளிமையாக செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் = 1 கப்பு நிறைய
கோதுமை மாவு = 1/2 கப்பு
பெரிய வெங்காயம் = 1 பீஸ்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
மிளகு = 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் = 3 பீஸ்
சீரகம் = 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஓட்ஸ்யை மட்டும் தனியாக எடுத்து வறுத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். சீரகத்தை லேசாக தட்டி இடித்து வதக்கியவற்றுடன் சேர்த்து கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்த ஓட்ஸ் மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். முன்பே வதக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு சீரகம் ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்கவும்.
இறுதியாக தோசை கல்லை காயவிட்டு, எண்ணெய் தேய்த்து ஓட்ஸ் தோசை மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
இப்போது சூடான, டேஸ்ட் ஆன ஓட்ஸ் தோசை தயார்!!
