சத்தான, சுவையான ஓம முறுக்கு இப்போது வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
பச்சரிசி = 1 கிலோ
உளுந்து = 200 கிராம்
ஓமம் = 25 கிராம்
எள்ளு = 25 கிராம்
தேங்காய் எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
டால்டா = 100 கிராம்
செய்முறை:
முதலில் அரிசியில் தண்ணீர் ஊற்றி களைந்து, நிழலில் உலர வைக்கவும். உளுந்தை லேசாக வறுத்து, அரிசியுடன் கலந்து அரைத்து வைக்கவும். எள் மற்றும் ஓமம் இரண்டையும் லேசாக வறுக்கவும்.
வறுத்து வைத்த ஓமம், எள் மற்றும் டால்டாவையும் மாவுடன் கலந்துகொள்ளவும். தண்ணீரை தனியாக கொதிக்கவைத்து, அதில் பெருங்காயமும் தேவையான அளவு உப்பும் சேர்த்து கலக்கவும். இந்த தண்ணீரை மாவுடன் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை முறுக்கு பிழியும் அச்சில் வைத்து பிழிந்து, மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
இப்போது சுவையான சத்தான ஓம முறுக்கு தயார்!!