பெண்கள் வீட்டில் எந்த வொரு காய்கறிகள் இல்லாத போது வைப்பது தான் ரசம். ஆனால் சிலர்க்கு ரசம் நன்றாக வராது. மேலும் அது தண்ணீர் போல் ஆகிவிடும். இனி கவலையே வேண்டும். கீழ் உள்ள புதுவிதமாக ரசத்தை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பிஞ்சு இஞ்சி – 50 கிராம்
பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 டம்ளர்
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
சர்க்கரை – ஒரு சிட்டிகை
எலுமிச்சைச் சாறு – அரைப் பழச் சாறு
உப்பு – தேவையான அளவு தாளிக்க
நெய் – 2 டீஸ்பூன்
கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்
பொடித்த மிளகு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
தக்காளி – 1
வாணலியில் சிறிதளவு நெய் விட்டுச் சூடானதும் அதில் கடுகு, சீரகம், பொடித்த மிளகு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.
பிறகு தக்காளி, இஞ்சித் துருவல், உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துப் புரட்டி பருப்புத் தண்ணீரைச் சேருங்கள்.
நுரைகட்டி வரும்போது மல்லித்தழை, கறிவேப்பிலை, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து இறக்குங்கள். கொதிக்கவிடக் கூடாது.
Leave a Comment