20230109 114128

மணக்க மணக்க மணத்தக்காளி வத்தக் குழம்பு இப்படி செய்து பாருங்கள்!!

வத்த குழம்பு என்றாலே எல்லோருக்கும் நாவில் ஜலம் ஊற ஆரம்பித்து விடும். வத்தக்குழம்பு சுவைக்கு ஈடு இணை எந்த குழம்பிற்கும் இல்லை என்று கூறலாம். சுண்ட சுண்ட வைத்த வத்தல் குழம்பு இன்னும் அதிக ருசியை தரும் என்பார்கள். புளியை ஊற்றி செய்யும் வத்தல் குழம்பு ஒரு வாரம் வரை கூட நாம் வைத்து சாப்பிடலாம். வத்தல் குழம்பு செய்ய பொதுவாக கடைகளில் விற்கும் மசாலா பொருளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். நம் வீட்டில் நாமே நம் கைப்பட அரைத்த மசாலாவை கொண்டு வத்தல் குழம்பு வைத்தால் அதன் ருசி அலாதியானதாக இருக்கும். மணத்தக்காளி வத்தல் போட்டு குழம்பு செய்யும் எளிய முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி வத்தல் – ஒரு கப்,

கடுகு – அரை ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 1,

கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ,சீரகம் – தலா ஒரு ஸ்பூன்,

வெந்தயம் – அரை ஸ்பூன்,

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன் ,

புளி – நெல்லிக்காய் அளவு (சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்),

சாம்பார் பொடி – 3 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள், உப்பு – தேவையான அளவு,

நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்த மல்லி, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும்.

இத்துடன் மணத்தக்காளி வத்தல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து புரட்டவும். இதில் புளித் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.